டெல்லி: ஜார்க்கண்டில் நடைபெற்று வரும் தியோகார் விமான நிலைய கட்டுமானப் பணிகள் வெகு விரைவில் நிறைவடைந்து, போக்குவரத்துக்கு தயாராகவுள்ளது. 2500 மீட்டர் நீளமுள்ள இதன் ரன்வேயில் ஏ320 ரக விமானங்களை கூட தரையிறக்க முடியும்.
![Deoghar airport](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8667672_m.jpg)
இந்த விமான நிலையத்தின் முனைய கட்டடத்தில் ஆறு சோதனை நிலையங்கள் உள்ளன. விமான போக்குவரத்தின் உச்ச நேரத்தில்கூட 200 பயணிகள் வரை இங்கு எளிதாக கையாள முடியும் என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், 653.75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தின் முனைய கட்டடம் 4,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. வெகு விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.