புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்குவதில் காலதாமதம் நிலவிவருகிறது.
இதனைக் கண்டித்து காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பதவி விலக வேண்டும். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் நிர்வாகம் மக்களைக்கு பயனற்று இருப்பதால் அவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் அனந்த்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரி அரசுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முதலமைச்சர், ஆளுநர் பதவி விலக வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் - அகில இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம்
புதுச்சேரி: அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்காத முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காரைக்காலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.