ETV Bharat / bharat

அட்டகாசமாக ஆம் ஆத்மியை வாழ்த்திய அமுல்! - அரவிந்த் கெஜ்ரிவால் அமுல் டூடுல்

டெல்லி: பிரபல பால் கூட்டுறவு நிறுவனமான அமுல் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிக்கும் வகையில் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது.

amul doodle on Delhi election
amul doodle on Delhi election
author img

By

Published : Feb 13, 2020, 2:01 PM IST

Updated : Feb 13, 2020, 3:14 PM IST

இந்தியாவின் மிகப்பெரிய பால் கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்றான அமுல் நிறுவனம், அதன் அட்டகசமான கார்ட்டூன்களுக்கு பெயர்பெற்றவை. சம காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை யார் மனதையும் புண்படுத்தாத வகையில் கிண்டலடிக்கும் அமுலின் கார்ட்டூன்களுக்கு ரசிகர்கள் ஏராளம்.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றியைப் பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.

இதற்காக ஆம் ஆத்மி கட்சியையும் அரவிந்த் கெஜ்ரிவாலையும் வாழ்த்தும் வகையில் அமுல் நிறுவனம் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லியைக் கைப்பற்றியுள்ளது" என்று பதிவிட்டுள்ளது. அமுல் நிறுவனத்தின் இந்த ட்வீட் வைரலாக பரவிவருகிறது.

இதையும் படிங்க: டெல்லியில் மீண்டும் 'தர்பார்' அமைத்த 'சுல்தான்' அரவிந்த் கெஜ்ரிவால்

Last Updated : Feb 13, 2020, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.