ETV Bharat / bharat

டெல்லி கலவரம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்! - டெல்லி உயர் நீதிமன்றம்

டெல்லி: ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெல்லி கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதைப் பற்றி மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

delhi-riots-hc-seeks-centres-stand-over-caa-arrests

author img

By

Published : Apr 28, 2020, 6:53 PM IST

கரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறையில் நெரிசலைக் குறைக்க கைதிகளை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் கலவரமாக வெடித்தது. அக்கலவரத்திற்கு காரணமானவர்கள் என பலரையும் டெல்லி காவல் துறையினர் ஊரடங்கு காலத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமியத்- ஐ-ஹிந்த் அமைப்பு சார்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ”கரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி போராட்டத்தில் கலவரம் செய்ததாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கைது செய்கையில் அவர்களின் குடும்பங்களுக்கு தெரிவிக்கப்படாமலும், உச்ச நீதிமன்றத்தின் விதிகள் மீறப்பட்டும் வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சித்தார்த் மிருதுல், தல்வந்த் சிங் ஆகியோரின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கலவரத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்படும்போது உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தற்போது கலவரங்கள் தொடர்பானவர்களை கரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் கைது செய்யப்படுவது பற்றிய நிலைப்பாட்டை மத்திய அரசு, டெல்லி அரசு, டெல்லி காவல் துறையினர் ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவிட்-19: திகார் சிறையிலிருந்து 400 கைதிகள் விடுவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.