டெல்லி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதற்காக மெட்ரோ சேவைகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டது.
இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "வெளியே சென்று வாக்களியுங்கள். பெண்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். வீட்டின் பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொள்வது போல் நாட்டின் பொறுப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
டெல்லியின் பொறுப்பை உங்களின் தோள்களில் ஏற்றி கொள்ளுங்கள். வீட்டில் உள்ள ஆண்களை அழைத்து சென்று தேர்தலில் வாக்களியுங்கள். வாக்கு உங்கள் உரிமை என்பது குறித்து விவாதம் செய்ய தயங்காதீர்கள்" என பதிவிட்டுள்ளார்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையே 70 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடையவுள்ளது.
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பாஜக சார்பாக சுனில் யாதவும் காங்கிரஸ் சார்பாக ரோமேஸ் சபர்வால் களமிறங்கியுள்ளனர்.
ஆம் ஆத்மியின் திலீப் பாண்டே திமர்பூர் தொகுதியிலும் அதிஷி கல்காஜி தொகுதியிலும் களம் காணுகிறார்கள்.
-
वोट डालने ज़रूर जाइये
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
सभी महिलाओं से ख़ास अपील - जैसे आप घर की ज़िम्मेदारी उठाती हैं, वैसे ही मुल्क और दिल्ली की ज़िम्मेदारी भी आपके कंधों पर है। आप सभी महिलायें वोट डालने ज़रूर जायें और अपने घर के पुरुषों को भी ले जायें। पुरुषों से चर्चा ज़रूर करें कि किसे वोट देना सही रहेगा
">वोट डालने ज़रूर जाइये
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 8, 2020
सभी महिलाओं से ख़ास अपील - जैसे आप घर की ज़िम्मेदारी उठाती हैं, वैसे ही मुल्क और दिल्ली की ज़िम्मेदारी भी आपके कंधों पर है। आप सभी महिलायें वोट डालने ज़रूर जायें और अपने घर के पुरुषों को भी ले जायें। पुरुषों से चर्चा ज़रूर करें कि किसे वोट देना सही रहेगावोट डालने ज़रूर जाइये
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 8, 2020
सभी महिलाओं से ख़ास अपील - जैसे आप घर की ज़िम्मेदारी उठाती हैं, वैसे ही मुल्क और दिल्ली की ज़िम्मेदारी भी आपके कंधों पर है। आप सभी महिलायें वोट डालने ज़रूर जायें और अपने घर के पुरुषों को भी ले जायें। पुरुषों से चर्चा ज़रूर करें कि किसे वोट देना सही रहेगा
பாஜகவின் விஜேந்தர் குப்தா ரோஹினி தொகுதியிலும் கபில் மிஸ்ரா மாடல் டவுன் தொகுதியிலும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக மூன்று தொகுதிகளில் வென்றது. 1998ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை டெல்லியில் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவந்தது.
இதையும் படிங்க: தலைநகரில் இன்று சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு