டெல்லி வன்முறை சம்பவமானது நாடாளுமன்ற இரு அவைகளிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறை சம்பவம் குறித்தான அறிக்கையை டெல்லி காவல் துறை உள் துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது.
முன்னதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்னும் இயக்கத்தைச் சேர்ந்த பெர்வெஸ் அகமது என்பவரையும் முகமது இலியாஸ் என்பவரையும் காவல் துறை சிறப்புக் குழு, கலவரத்தைத் தூண்டிவிட நிதி அளித்ததாகக் கூறி கைதுசெய்தது.
முகமது இலியாஸ் 2020 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கரவால் நகர் பகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. டெல்லி கலவரத்தில் உளவுத் துறை துறை அலுவலர் அங்கித் சர்மா என்பவரைச் சுட்டுக்கொன்றதற்காக சல்மான் என்பவரை காவல் துறை சிறப்புக் குழு கைதுசெய்தது.
இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் குறித்தும், கலவரத்தின் பின்னணி குறித்த ஆதாரங்களையும் காவல் துறையினர் சேகரித்துவருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் கலவரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க... 'டெல்லி வன்முறைக்கு எதிர்க்கட்சிகளே காரணம்' - அமித் ஷா குற்றச்சாட்டு