ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தும் நோக்கத்துடன் டெல்லிக்குள் நுழைய முயற்சிப்பது குறித்து உளவுத்துறை செய்தி வெளியிட்டது.
இதையடுத்து, டெல்லி காவல் துறையினர் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட்டுவருக்கின்றனர். மேலும் பேருந்து, கார் அல்லது டாக்ஸியைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் சாலை வழியாக டெல்லிக்குள் நுழைய வாய்ப்புள்ளதாக புலனாய்வு அமைப்புகள் கூறியுள்ளன. இதனால், டெல்லி காவல் துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.