இது குறித்து ஹரியானா மாநிலம் குர்கோன் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காணொலியில், "கடந்த 25 ஆண்டுகளாக என்னுடைய மகனுக்கு ஒவ்வொரு மாதமும் ரத்தப் பரிமாற்றம் செய்துவருகிறோம். பொது ஊரடங்கு காரணமாக அவருக்கு ரத்தப் பரிமாற்றம் செய்வதில் பல சிக்கல்களைச் சந்தித்துவருகிறோம்.
எனது மகனுக்கு ரத்தப் பரிமாற்றம் செய்ய டெல்லியில் உள்ள அப்போலோ, மேக்ஸ் போன்ற தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளை அணுகினேன். ஆனால், அவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர்.
மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு, மெதாண்டா என்ற தனியார் மருத்துவமனை சிகிச்சை அளிக்க ஒப்புக்கொண்டது. ஆனால், ரத்தப் பரிமாற்றம்செய்ய இரண்டு லட்சம் ரூபாய் கேட்கின்றனர்.
எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை. எனினும் வேறு வழியில்லாமல் எனது மகனை அங்கே அனுமதித்துள்ளோம்" எனக் கண்ணீர் மல்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. இதனைக்கண்ட டெல்லிவாசிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
கரோனா பெருந்தொற்று காரணமாக வெளிநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பெரும்பாலான மருத்துவமனைகள் மறுத்துவருகின்றன. அப்படி ஏற்கும் சில மருத்துவமனைகள், நோயாளிகளிடமிருந்து இயல்புக்கும் அதிகமாகப் பணம் கேட்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க : கட்டுக்குள் வெட்டுக்கிளி தாக்குதல் - ராஜஸ்தான் அரசு