ETV Bharat / bharat

சத்யேந்திர ஜெயினுக்கு கரோனா உறுதி - அச்சத்தில் அமித் ஷா - அமித் ஷா

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Delhi health
Delhi health
author img

By

Published : Jun 17, 2020, 8:14 PM IST

Updated : Jun 18, 2020, 2:16 AM IST

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், டெல்லி ராஜீவ் காந்தி சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தற்போது உறுதிசெய்யப்பட்டது.

சோதனையில் ஏன் இந்த குளறுபடிகள்?

முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு, கரோனா தொற்று நெகட்டிவ் என்று ஆய்வின் முடிவில் வந்தது. அவரும் கரோனா பாதிப்பு இல்லை என்ற நிம்மதியுடன் இருந்தார். ஆனால், இன்று மீண்டும் நடத்தப்பட்ட சோதனையில், கரோனா தொற்று இருப்பதாக பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மாநில சுகாதாரத் துறை அமைச்சருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே இவ்வளவு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதால், மக்களிடம் நடத்தப்படும் சோதனைகள் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை என்று டெல்லி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சத்யேந்திர ஜெயினால் அமித் ஷா விற்கு வந்த சோதனை!

இதனிடையே, கடந்த திங்கள்கிழமை அன்று டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெயின் மருத்துவமனையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவருடன் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் உடனிருந்தார்.

தற்போது சத்யேந்திர ஜெயினுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், தனக்கும் கரோனா பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் அமித் ஷா உள்ளார்.

இதையும் படிங்க:முதலமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்

Last Updated : Jun 18, 2020, 2:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.