டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கடந்த புதன்கிழமை கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. கடும் காய்ச்சல், மூச்சுத் திணறலால் அவதிப்படும் அவர் டெல்லி ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த வியாழக்கிழமை இரவு அவர் உடல்நிலை மோசமான நிலையில், டெல்லி மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்குப் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிளாஸ்மா சிகிச்சைக்குப்பின் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருக்குத் தற்போது காய்ச்சல் இல்லை எனவும், அடுத்த 24 மணிநேரம் கண்காணிப்புக்குப்பின் அடுத்தகட்ட தகவல்கள் தெரிவிக்கப்படும் எனவும் மருத்துவமனை கூறியுள்ளது.
அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: மணிப்பூர்: காங்கிரஸை வீழ்த்திய பாஜக, குஷியில் முதலமைச்சர்!