ETV Bharat / bharat

'சசிகலா புஷ்பாவின் புகைப்படம், வீடியோக்களை நீக்க வேண்டும்' - டெல்லி உயர் நீதிமன்றம் - டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களைச் சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

asi
sasi
author img

By

Published : Jul 30, 2020, 1:19 AM IST

அதிமுகவின் ராஜ்யசபா எம்பியாக இருந்த சசிகலா புஷ்பா, 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதியன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், ”யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எனது புகைப்படங்கள், வீடியோக்கள் தவறாகச் சித்தரிக்கப்பட்டு, வெளியிடப்படுகின்றன. அவற்றை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ”சசிகலா மக்களுக்கான உறுப்பினர். திரைக்குப் பின்னால் யாரைச் சந்திக்கிறார் என்பதை மக்கள் அறிய வேண்டும். எனவே, புகைப்படங்களை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், சசிகலா குறிப்பிட்டுள்ள சமூக வலைதளங்களுக்கு நஷ்டஈடாக 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்” என தீர்ப்பளித்தார். இதில், அதிருப்தியடைந்த சசிகலா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் சித்தார்த் மிருதுல், தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனுமதியின்றி பெண்களின் புகைப்படங்கள் பதிவிடுவது கிரிமினல் குற்றமாகும்” என்று கூறினர்.

மேலும், சமூக வலைதளங்களுக்கு சசிகலா 2 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையை செப்டம்பர் மூன்றாம் தேதிக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், சசிகலா புஷ்பா தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்களைச் சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்கள் உடனடியாக நீக்கவும் உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.