ETV Bharat / bharat

மனநலம் குன்றியவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Jul 25, 2020, 5:06 AM IST

டெல்லி: மனநலம் குன்றியவர்கள், வீடற்ற மக்கள் உள்ளிட்டவர்களுக்கு கோவிட் -19 கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ள வழிமுறைகளைக் கண்டுபிடித்து வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.

மனநலம் குன்றியவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
மனநலம் குன்றியவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு நாடு முழுவதும் தீவிரமடைந்துவரும் நிலையில், டெல்லியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வீடற்றவர்களுக்கும் கோவிட் -19 கண்டறிதல் பரிசோதனைகளை மேற்கொள்ள வழிகாட்டுதல்களை வழங்குமாறு வழக்குரைஞர் கௌரவ் குமார் பன்சால் சார்பில் பொது நல வழக்கு (பிஐஎல்) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அம்மனுவில், " மன நலம் குன்றியவர்கள், வீடற்ற, ஆதரவற்ற நபர்களுக்கு கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்வதில் முதன்மை சிக்கலாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, கைப்பேசி போன்றவை இல்லாதது ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) தேசிய வழிகாட்டுதல்களில் கட்டாய நிபந்தனைகளாக இவை உள்ள காரணத்தால் மேற்கண்டவர்களிடையே கண்டறிதல் சோதனை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவற்றை பரிசோதனைகளை மேற்கொள்ளும் இந்திய சுகாதார ஆராய்ச்சித் துறை, டெல்லி சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவை கட்டாயமாக்கி உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

சந்தேகத்திற்கிடமான மனநோயால் பாதிக்கப்பட்ட வீடற்ற மக்கள், ஆதரவற்ற நபர்கள் என அனைவரும் இந்நாட்டு மக்கள் தான். அவர்கள் அனைவரும் கரோனா கண்டறிதல் உள்ளிட்ட அனைத்து வகையான சுகாதார சேவைகளைப் பெற தகுதியானவர்கள் தான். ஏனெனில், இதுபோன்ற நபர்கள் சராசரியான மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் தொற்றுநோய்களின் அபாயங்களுக்கு அதிகமாக உள்ளாகின்றனர்.

வீடற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற அனைத்து வகையிலும் புறக்கணிக்கப்பட்ட கடைநிலை மக்களாகவே உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் அனைத்து வகையான இயற்கை மற்றும் செயற்கை பேரிடர்களில் முதன்மையாக பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளாக உள்ளனர். எனவே, இந்த எளிய மக்களுக்கு சிறப்பு கவனிப்பும், உதவிகளும் தேவைப்படுகிறது. அரசும், சமூகமும் அதன் ஆதரவுக் கரங்களை இவர்களுக்கு நீட்ட வேண்டும்.

இருப்பினும், தற்போது கரோனா தொற்றுநோய் போன்ற ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில் வீடற்றவர்களுக்கு, மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு திட்டங்களை வகுத்திருக்க வேண்டும்.

எனவே, டெல்லி மற்றும் மத்திய அரசுகளுக்கு நீதிமன்றம் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.என். படேல் மற்றும் பிரதீக் ஜலான் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், "மனநல சுகாதார சட்டம்-2017 பிரிவு 3 (3)யின் படி, மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து விதமான சேவைகளையும் வழங்குவதற்கு, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

இதுபோன்ற பொது சுகாதார நலத் திட்டத்தில் விளிம்பு நிலை மக்களான அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வகுத்து செயல்படுத்துவது அரசின் கூடுதல் பொறுப்பாகும்.

கொடிய வைரஸ் தொற்று போன்ற பாதிப்புகளால் கடும் நெருக்கடி எழுந்துள்ள சூழலில் அவர்களுக்கு மனநல சிகிச்சைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவற்றிலிருந்து அவர்களை திறம்பட பாதுகாக்கவும் வேண்டும்.

எனவே, வீடற்றவர்களுக்கு அடையாளச் சான்றுகள் இல்லையென்றாலும், குறைந்தபட்சம் அவர்களுக்கு பரிசோதனை வசதியை வழங்க சில வழிமுறைகளை உருவாக்க டெல்லி அரசும், மத்திய அரசும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.