நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதில் டெல்லி, தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில், இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கிலும், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் நோக்கிலும், வீடு வீடாகச் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ், மக்களுக்குத் தேவையான அரசி, கோதுமை மாவு, சர்க்கரை போன்றவை சுத்தமான முறையில் பையில் அடைக்கப்பட்டு, வீடு வீடாகச் சென்று வழங்கப்படும்.