டெல்லி: வடக்கு டெல்லியின் முன்னாள் மேயர் யோகேந்தர் சந்தோலியா, டெல்லி போக்குவரத்து காவலர்களை அவமதித்த வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலானது. இதைத்தொடர்ந்து, அவர் மீது டெல்லி காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
கரோல் பாக் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் உரிமையாளர்களிடம் காவல் துறையினர் லஞ்சம் வாங்கியதாக யோகேந்தர் சந்தோலியா குற்றஞ்சாட்டினார்.
மேலும், அருகிலிருந்து கோயிலுக்குச் சென்ற பக்தர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்ததை மட்டும் தான், தான் கண்டித்ததாகவும், காவலர்கள் தன்னை தகாத வார்த்தையில் திட்டியதாகவும் பாஜக முன்னாள் மேயர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெண்களை அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய பாஜக பிரமுகர்!