பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவதற்காக ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் ஷெகட்கர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு பாதுகாப்புத் துறையை வலுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. இது குறித்து இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், துறையின் முக்கிய அலுவலர்களோடு ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே, கப்பல்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், விமானப்படைத் தலைமைத் தளபதி மார்சல் ராகேஷ் குமார் சிங் பதௌரியா, பாதுகாப்புத் துறையின் முக்கிய அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதில், ''ஆயுதங்கள் உற்பத்திக்குத் தனியார் நிறுவனங்களைப் பயன்படுத்துதல், வாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் குறைத்தல், தொழில்நுட்ப ஆயுதங்களை மேம்படுத்துவதல்'' ஆகியவற்றைப் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சதீஷ் ரெட்டி பங்கேற்றார். இந்த ஷெகட்கர் குழுவினை பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சராக பதவி வகித்த மனோகர் பாரிக்கர் அமைத்திருந்தார். மேலும் இந்தக் குழு வழங்கிய ஆலோசனைகள் சிலவற்றை, ஏற்கனவே பாதுகாப்புத் துறை அமல்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரதமர் பத்தரை மாற்றுத் தங்கம்; அவரை சந்தேகப்படாதீங்க - ராஜ்நாத் சிங்