ETV Bharat / bharat

ஐ.என்.எஸ். கந்தேரி நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்! - Rajnath singh

மும்பை: நீருக்கடியில் ஏவுகணை ஏவும்  ஐ.என்.எஸ். கந்தேரி நீர்மூழ்கி கப்பலை இந்திய நாட்டுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் அர்ப்பணித்தார்.

ஐ.என்.எஸ்
author img

By

Published : Sep 28, 2019, 1:52 PM IST

பிரெஞ்சு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட டீசலில் இயங்கும் ஐ.என்.எஸ். கந்தேரி நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மும்பையில் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முக்கிய கப்பல் படை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய துணை அட்மைரல் அசோக் குமார், பி17 ஏ போர் கப்பல்களின் முதல் கப்பலான எ.என்.எஸ். நீலகிரி கப்பல் இந்த நிகழ்வில் இயக்கப்படும் என்றும், விமான கேரியரும் அமைச்சரால் தொடங்கி வைக்கப்படும். கந்தேரி மற்றும் நீலகிரி கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததன் மூலம் கடற்படையின் பலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்றார்.

அமைச்சர் ராஜ்நாத் சிங்
அமைச்சர் ராஜ்நாத் சிங்

மேலும் இந்தியாவின் மிகப்பெரும் கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவையே உடைக்கும் திறன் கொண்டது ஐ.என்.எஸ். கந்தேரி கப்பல் என்றும், நீருக்கு அடியில் உள்ள இலக்குகளை அழிப்பதிலும், ஏவுகணை ஏவுவதிலும் வல்லமை பெற்றது ஐ.என்.எஸ். கந்தேரி எனத் தெரிவித்தார்.

இதில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், நாட்டின் பாதுகாப்பில் எவ்வித சமரசமுமின்றி அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. இந்த கப்பல்கள் அர்ப்பணித்தன் மூலம் இந்திய கப்பற்படை மேலும் வலிமை பெற்றுள்ளது. இந்திய கப்பற்படையில் இடம்பெற்றுள்ள இரண்டாவது ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கி கப்பல் இது. இலக்குகளை சரியாக தாக்கும் வல்லமை கொண்ட கப்பல் இது. கடந்த 2005ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் 6 நீர்மூழ்கி கப்பல்கள் வாங்குவதாக முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இதுவரை இரண்டு கப்பல்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மீதமுள்ள நான்கு கப்பல்களும் இந்திய கப்பற்படையில் இணைக்கப்படும் எனப் பேசினார்.

இதையும் படிக்கலாமே: 'ஆசியாவிலேயே முதுமையான' சிம்பன்சிக்கு உடல்நலக் குறைவு

Intro:Body:

மும்பையில் ஐ.என்.எஸ். கந்தேரி நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் #RajnathSingh | #Khanderi

https://www.etvbharat.com/english/national/bharat/bharat-news/def-min-commissions-2nd-kalvari-class-submarine-ins-khanderi/na20190928082756376

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.