ETV Bharat / bharat

விநாயகர் சிலைகளுக்குத் தடை! எதிர்த்து மத்திய அமைச்சரவை மனு!

author img

By

Published : May 23, 2020, 7:22 PM IST

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கொண்டு செய்யும் விநாயகர் சிலைகளுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடைவிதித்துள்ளதைத் தொடர்ந்து, அதை எதிர்த்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Union Minister of Environment
Union Minister of Environment

டெல்லி: விநாயகர் சிலைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்த தடையை எதிர்த்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் மனு தாக்கல் செய்துள்ளதாக அதன் அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.

மேற்குத் தொடர்ச்சி மலையை, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கச் செய்யும் பணியின் முன்னேற்றம் குறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. அதில், மேற்குத் தொடர்ச்சி மலை பரவியுள்ள மாநிலங்களான தமிழ்நாடு, குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில அரசுகளின் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதனையடுத்து ட்வீட் செய்துள்ள மத்திய அமைச்சர், “விநாயகர் சிலைகளை செய்ய சிறு தொழிலாளர்கள் முன்னதாகவே முனைப்புக் காட்டி பாதி வேலைகளை முடித்துள்ளனர். கரோனா காலங்களின் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 27 பூச்சிக்கொல்லிகளுக்கு தடை!

இந்த சமயத்தில், இதுபோன்ற தடைகள், லட்சக்கணக்கிலான குடும்பங்களை பெருமளவில் பாதிக்ககூடும். எனவே இந்த வருடம் மட்டும் இதற்கு விலக்கு அளிக்க மனு தாக்கல் செய்துள்ளதாக” அவர் பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தெர்மாகோல், நெகிழி, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு செய்யப்படும் சிலைகளுக்கு, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்திருந்தது. மக்கும் தன்மைக் கொண்ட மூலப்பொருட்களின் மூலம் செய்யும் சிலைகளுக்கு மட்டுமே அவ்வாரியம் அனுமதி அளித்திருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.