கர்நாடக வெள்ளத்தில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆகவும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 9 ஆகவும் உயர்ந்துள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள், காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை அம்மாநில அரசு மாவட்ட வாரியாக வெளியிட்டுள்ளது.
மேலும், கர்நாடக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையாக ஒரு கோடியே 95 லட்ச ரூபாயை அறிவித்துள்ளது.