புதுச்சேரியில் 'நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை இணைச்செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் மத்திய குழு இன்று ஆய்வுசெய்து வருகின்றனர்.
முதலாவதாக தலைமைச் செயலகத்தில் புதுச்சேரி அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய மத்திய குழுவினர், புதுச்சேரி நகரப்பகுதியில் இருந்து புறப்பட்டு பத்துக்கண்ணு, வழுதாவூர் சாலை பாதிப்புகளை ஆய்வுசெய்தனர். தொடர்ந்து ராமநாதபுரம், சந்தை புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை உள்ளிட்ட பயிர் சேதங்களையும், தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தையும் மத்திய குழு ஆய்வு செய்தனர். ஆய்வை முடித்துக்கொண்டு தலைமைச் செயலகம் வரும் மத்திய குழுவினர், அங்கு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, கடலூருக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.
இக்குழுவில் மத்திய வேளாண்துறை இயக்குநர் மனோகரன், மீன்வளத்துறை ஆணையர் பால் பாண்டியன், சாலைப் போக்குவரத்துத்துறை மண்டல அலுவலர் ரணஞ்சய் சிங் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இதையும் படிங்க:மத்திய குழுவிடம் பாதிப்புகளை எடுத்துச் சொல்வதோடு உரிய நிதியினையும் பெறுக! - ஸ்டாலின் வலியுறுத்தல்