ETV Bharat / bharat

ஆம்பன் புயலால் கரோனா கணக்கெடுக்கும் பணியில் தொய்வு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயலின் தாக்கத்தால் கரோனா வைரஸ் பரிசோதனை அளவு மாநிலத்தில் பாதியாக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Cyclone Amphan hits COVID-19 testing in Bengal; coronavirus death toll rises to 193

author img

By

Published : May 23, 2020, 11:38 PM IST

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்ட 'ஆம்பன்' புயல், அதிதீவிரப் புயலாக மாறி மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே கரையைக் கடந்தது. இதனால் மேற்கு வங்க மாநிலம், கரோனாவினால் ஏற்பட்ட பாதிப்புகளை விட கடுமையான பாதிப்பிற்குள்ளாகியதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

மாநிலம் முழுவதும் ஆம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றிருக்கும் நிலையில், புயல் காரணமாக மாநிலத்தில் கரோனா வைரஸ் பரிசோதனைகளின் அளவு பாதியாக குறைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ஆய்வகங்கள் திறப்பதில் சிக்கல் இருந்தததாகவும், புயல் கரையைக் கடந்த பின் வெள்ளம், சூறைக்காற்றினால் சாலைகள் மிகுந்த சேதாரத்திற்குள்ளாகி உள்ளதால் அவசர ஊர்திகளும் கூட சாலைகளில் பயணிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

புயலுக்கு முன்னதாக செவ்வாய், புதன் கிழமைகள் முறையே 8,172 மற்றும் 8722 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், புயல் பாதிப்புகளுக்குப் பிறகு மாநிலத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் 4,242 மற்றும் 5,355 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதையடுத்து கரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'கரோனாவை விட ஆம்பன் புயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது' - மம்தா பானர்ஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.