விமான நிலையத்தில் சமீப காலமாகத் தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் நடத்தப்படும் சோதனையின் போது, சட்டவிரோதமாகத் தங்கத்தைக் கடத்தும் நபர்கள் கைது செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.
கார்பன் ஷீட்டில் தங்கம் கடத்தல்:
இந்த நிலையில் துபாயிலிருந்து மும்பைக்கு வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அலுவலர்கள் வழக்கமான சோதனைகளில் ஈடுபட்ட போது, பெண் பயணி ஒருவர் கார்பன் பேப்பரில் சுற்றப்பட்ட தங்க ஷீட்டை சாக்லேட் பாக்ஸில் வைத்துக் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து 24 கேரட் 481 கிராம் எடையுள்ள தங்கத்தை மீட்ட அலுவலர்கள், அதைக் கடத்தி வந்த பெண்ணையும் கைது செய்தனர். இதுகுறித்து மேல் விசாரணை நடத்தி வருவதாக மும்பை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
கடந்த டிசம்பர் 26ஆம் தேதி ஹைதராபாத் விமான நிலையத்தில் ரூ. 94 லட்சம் மதிப்புள்ள இரண்டு கிலோ தங்கம் கடத்தியதாகப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.