ETV Bharat / bharat

மாற்றுத்திறனாளி சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பயிற்சி மையம் - மத்திய ரிசர்வ் காவல் படை

ஹைதராபாத்: பணியில் இருக்கும்போது உடல் ரீதியாக கடுமையான காயம் ஏற்பட்டு மாற்றுத்திறனாளிகளாகிய மத்திய ரிசர்வ் காவல் படையினருக்கு (CRPF) பயிற்சி அளிக்கும் தேசிய அளவிலான மையம் வரும் டிசம்பர் 10ஆம் தேதி திறக்கப்படுகிறது.

CRPF sets up training centre
CRPF sets up training centre
author img

By

Published : Dec 8, 2020, 10:07 AM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்கான தேசிய மையத்தை (NCDE) மத்திய ரிசர்வ் காவல் படை ஏற்படுத்தியுள்ளது. தங்களது கடமையைச் செய்யும்போது கடும் காயமடைந்து மாற்றுத்திறனாளிகளாக மாறிய மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதே இந்த மையத்தின் முதன்மையான நோக்கம்.

வீரர்களுக்கு வெவ்வேறு விளையாட்டுகளில் பயிற்சி அளிப்பதற்கான அனைத்து நவீன வசதிகளையும் இந்த மையம் கொண்டுள்ளது. வரும் டிசம்பர் 10ஆம் தேதி இந்த மையத்தின் சேவை தொடங்கப்படும்.

இங்கு வீரர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான உடற்பயிற்சிகளை வழங்குவதோடு, கூடவே தொழில்நுட்ப வளர்ச்சியில் இயைந்த கணினி பயிற்சியும் வழங்கப்படுகிறது.

பணியில் கடுமையான காயங்களுக்குள்ளாகிய மத்திய ரிசர்வ் காவல் படையினர் மேற்கொண்டு தங்களது பணியில் தொடரும் வகையில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.