குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் பலஜோடிகள் ஒரே நேரத்தில் மணமுடிக்கும் வகையில், பிரமாண்ட திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களாகப் பணியாற்றும் காதல் ஜோடியினர், இந்த திருமண ஏற்பாடுகளில் கலந்துகொண்டு, மிக எளிய முறையில் தங்களது திருமணத்தையும் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர். சி.ஆர்.பி.எஃப் காதல் ஜோடியின் இந்த முடிவுக்கு, பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தத் திருமணமானது வருகிற 12ஆம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து மணமகள் கமாண்டோ தயா கூறும்போது, ' எங்கள் திருமணம் எளிய முறை திருமண விழாவாக இருக்க விரும்புகிறோம். இவ்வாறு திருமணம் செய்வதன் மூலம் தேவையற்ற செலவுகள் குறைகின்றன. இது பெற்றோரின் சுமையையும் குறைக்கிறது. இதுவே இந்த முடிவை நாங்கள் எடுத்ததற்கு பொதுவான காரணங்கள் ' என்றார்.
மணமகன் கமாண்டோ பெல்டியா ஹார்டிக் கூறும்போது, ' நாங்கள் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருமணங்களுக்கு அதிக செலவு செய்யும் கருத்து எனக்குப் பிடிக்கவில்லை. தேவையற்ற செலவுகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும். ஆகவே, இந்த எளிய திருமணம் என்ற கருத்து எனக்குப் பிடித்தது' என்றார்.
இதையும் படிங்க: கர்ப்பிணிப் பெண்ணை திருமணப் பெண்ணாக்கிய காவல் துறை!