ETV Bharat / bharat

கோவிட்-19 சவாலை எதிர்கொள்வது எப்படி? நுண்கிருமி மருத்துவர் ஜான் ஜேக்ப் பிரத்யேகப் பேட்டி

கரோனா பெருந்தொற்றால் இந்தியா சவாலான சூழலை சந்தித்துவரும் நிலையில், நோயை எவ்வாறு எதிர்கொள்வது என வேலூர் சி.எம்.சி மருத்துவமணையைச் சேர்ந்த முன்னணி நுண்கிருமி மருத்துவர் ஜான் ஜேக்ப் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திடம் மேற்கொண்ட பிரத்யேக உரையாடல் இதோ...

Jacob
Jacob
author img

By

Published : May 23, 2020, 9:29 PM IST

கேள்வி: லாக்டவுனிலிருந்து நாடு படிப்படியாக விடுவிக்கப்படும் நிலையில், தற்போது கரோனா பரவலை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும். பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க வேண்டிய சூழிலில் வைரஸ் பரவலை தடுப்பது எப்படி?

இந்த விவகாரத்தில் நாம் இரு கோணத்தில் பார்க்கப்படவேண்டும். லாக்டவுன் அறிவித்த நிலையிலும் இந்தியாவில் கரோனா பரவல் என்பது சீராக அதிகரித்துள்ளது. 20 நாட்களில் நோய் பரவல் 20 மடங்கு அதிகரித்துள்ளது. இந்திய பொருளாதாரம் லாக்டவுன் காரணமாக பாதிப்பிற்குள்ளான நிலையில், வைரஸ் பாதிப்பையும் நாம் புறக்கணிக்கப்பட முடியாது.

இந்தச் சூழலில் உரிய தனிநபர் இடைவெளி, முகக் கவசம் ஆகியவற்றின் மூலம் நாம் மெல்ல அன்றாட நடவடிக்கைகளைத் தொடங்கலாம். ஏப்ரல் 15ஆம் தேதி முதல் கட்ட லாக்டவுனுக்குப் பின்னரே இதை கடைபிடிக்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கலாம். ஆனால் மேலும் இரு முறை லாக்டவுனை நீட்டித்தது. இந்த லாக்டவுன் நீட்டிப்பில் எனக்கு உடன்பாடு இல்லை. மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நாள்பட்ட நோயளிகள், முதியவர்களை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வைத்திருப்பது நலம்.

கேள்வி: பொதுப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் நிலையில், உரிய தனிநபர் இடைவெளியை பொதுப்போக்குவரத்தில் கடைபிடிக்க முடியுமா?

பொது வெளியில் மக்கள் கூடுவதற்கான சூழல் நிகழும் போது மக்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது சற்று சிரமம்தான். அதேவேளை, அனைவரும் முகக் கவசம் அணிவதன் மூலம் நோய் பரவலை வெகுவாக தடுக்கலாம். அன்றாட நடடிக்கைகளை மீண்டும் தொடங்க முகக் கவசம் அனிவதே எளிய வழியாகும். அத்துடன், பெருந்தொற்று நீங்கும் வரை தேவையற்ற பொது நிகழ்வுகளில் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும்.

கேள்வி: தமிழ்நாட்டில் தற்போது வெய்யிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், கரோனா வைரஸ் பரவலை தட்பவெட்ப சூழல் பாதிக்குமா?

வெளியே தட்பவெட்பம் எப்படி இருந்தாலும், மனிதனின் உடலின் சராசரி தட்பவெட்ப நிலை 37 டிகிரியாகத்தான் இருக்கும். வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் சளி, உமிழ்நீர் மூலம் பரவும் என்பதால், வெய்யில் காலத்தின்போது அவை பொருட்களின் மேற்பரப்பில் நீண்ட நேரம் ஈரத்தன்மையுடன் இருக்காது. இதன் காரணமாக, நோய் தொற்று பரவுதல் கொஞ்சம் கட்டுக்குள் வரலாம்.

ஆனால், மீண்டும் மழைக்காலம் தொடங்கும் என்பதையும் அனைவரும் நினைவில் கொள்வது அவசியம். எனவே, தென்மேற்கு பருவ மழை காலம் வரை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

கேள்வி: அமெரிக்கா ஐரோப்பாவை ஒப்பிடும்போது இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. இந்தியர்களுக்கு எதிர்ப்பு சக்தி இருப்பதுதான் இதற்கு காரணமா?

பொதுவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வயதுமுதிர்ந்த மக்களின் எண்ணிக்கை குறைவாகும். இந்தியாவில் நோய் பாதிப்பின் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். மற்ற நாடுகளில் முதியோர் இல்லத்தில் வசிக்கும் நபர்கள் அதிகம் உள்ள சூழலில் இந்தியா இந்த விவகாரத்தில் ஒப்பீட்டு அளவில் அபாயம் குறைவுதான்.

கேள்வி: இஞ்சி, பூண்டு, மிளகு போன்ற உணவு பொருட்கள் வைரஸ் பாதிப்பை சமாளிக்க உவுமா?

உரிய உணவு பழக்கத்துடன் முறையான உடற்பயிற்சி மேற்கொள்ளவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே, செயற்கை முறைகளைவிட, இயற்கையான உணவு முறைகளை கடைபிடித்து, நீரிழவு மட்டும் நாட்பட்ட வியாதிகளை கட்டுக்குள் வைக்க வேண்டும்.

கேள்வி: இந்த வைரஸ் பெருந்தொற்று எவ்வாறு முடிவுக்கு வரும் தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளதா?

தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை இந்த நோய்தொற்று முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக்குறைவு. பாதிக்கப்பட்டவர்களில் 80% பேருக்கு நோய் அறிகுறி தெரிவதில்லை. எனவே, முகக் கவசம் நிச்சயம் அணிய வேண்டும். ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் வைரஸ் பாதிப்பு உச்சத்தை அடையலாம். மெல்ல உரிய மருந்துகள் கண்டரியப்பட்டு சிகிச்சை வழங்கப்படலாம். தற்போது எச்.ஐ.வி நோய்க்குப் பயன்படுத்தப்படும் ரெம்டிஸ்விர் மருந்து நல்ல பலன்களை அளிக்கிறது. 2021ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 1.9 கோடி குழந்தைகள் ஆம்பன் புயலால் பாதிப்பு - யுனிசெப் கவலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.