ETV Bharat / bharat

இந்தியாவில் கரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியின் நிலை என்ன? - undefined

பத்ம ஸ்ரீ விருதுபெற்ற ஐஐடி பேராசிரியர் செய்யது இ ஹஸ்னைன், இந்தியாவில் கரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியின் நிலை என்ன? என்பது பற்றி விளக்குகிறார். அவர் ஈநாடு பத்திரிகைக்கு அளித்த சிறப்பு நேர்காணலின் தொகுப்பு.

COVID 19 vaccine
COVID 19 vaccine
author img

By

Published : Apr 27, 2020, 5:03 PM IST

கரோனா தொற்றை சமாளித்து அதற்கான தீர்வை கண்டுபிடிக்கும் அதிநவீன அறிவியல் தொழில்நுட்பம் இந்தியாவில் உள்ளது என தெரிவிக்கும் பேராசிரியர் செய்யது, இந்திய மருத்துவ அமைப்புகள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது. இன்னும் சில மாதங்கள் அல்லது ஒரு ஆண்டிற்குள் இந்தப் பணி முடிந்துவிடும். அதுவரை அரசாங்கமும், சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்களும் கூறியுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி நடக்க வேண்டும். மருத்துவ பரிசோதனையை அதிகரிப்பதே சிறந்த வழி என கருத்து தெரிவித்தார்.

ஜெர்மனியின் பெடரல் ஆஃப் மெரிட் விருதுபெற்ற செய்யது இ ஹஸ்னைன், 2016ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள ஜமியா ஹம்தார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பொறுப்பேற்றார். அவர் ஈநாடு பத்திரிகைக்கு அளித்த நேர்காணல் தொகுப்பு பின்வருமாறு...

எதனால் புதிய வைரஸ் தொற்று வருகிறது? நாம் அதை முன்பே அடையாளம் காண முடியுமா?

புதிய வைரஸ் உருவாகுவது இயற்கையின் செயல், வைரஸ் மெல்ல மெல்ல பரிணாம வளர்ச்சி அடையும். இதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும். வைரசின் வளர்ச்சியில் அது வளரும் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. வைரசை முன்பே அடையாளம் காண்பதென்பது கிட்டத்தட்ட முடியாத காரியம். கோவிட் 19 தொற்றுக்குக் காரணமான வைரசின் தோற்றத்தை குறிப்பிட்டு சொல்வது கடினமான செயலாகும். ஆனால் எச்ஐவி-ஐ கண்டறிந்த நோபல் பரிசுபெற்ற அறிஞர் லுக் மாண்டேக்னியர், இது ஆராய்ச்சி கூடத்தின் தோன்றியது என கூறுகிறார்.

இந்தியாவில் கோவிட் 19 ஆராய்ச்சிக்கான வசதிகள் எப்படி உள்ளது?

வைரசின் வளர்ச்சியைக் கணிக்க சில அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறது. நம்மால் கோவிட் - 19 தொற்றுக்கான தடுப்பு மருந்தை உருவாக்க முடியும். இந்தியாவில் தடுப்பு மருந்து உருவாக்கும் பணியில் சிறந்து விளங்குகிறது புனேவில் உள்ள இந்திய சீரம் கழகம் (SII). ரோட்டா வைரஸ் பரவியபோது, ரோட்டாவக் எனும் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து பலரது உயிரைக் காத்தது ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக்.

பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில் இந்தியா எவ்வளவு தொலைவில் உள்ளது?

நாம் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த சூழலில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துக்கு முழு பொறுப்பையும் அளித்துள்ளது இந்திய அரசாங்கத்தின் சரியான முடிவாகும். இந்தக் கழகத்தின் சார்பாக ஒரு நாளில் 30 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் ஆகியவற்றை விட இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைவாக உள்ளது.

தடுப்பு மருந்தை உருவாக்க எவ்வளவு காலம் தேவைப்படும்?

தற்போது பல்வேறு மருத்துவ அமைப்புகளும் அந்தப் பணியில் தீவிரம்காட்டி வருகிறது. உலகளவில் 5 தடுப்பு மருந்துகள் சோதனை செய்வதற்கான நிலையில் உள்ளது. புனேவின் எஸ்ஐஐ, காசநோய்க்கு எதிரான பிசிஜி தடுப்பு மருந்தை முன்மாதிரியாகக் கொண்டு புதிய தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பாரத் பயோடெக் நிறுவனம் மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இன்னும் சில மாதங்கள் அல்லது ஒரு ஆண்டிற்குள் இந்தப் பணி முடிந்துவிடும். நாங்களும் ஜமியா ஹம்தார் பல்கலைக்கழகத்தில் இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறோம்.

இந்தியர்களுக்கு கரோனா வைரஸ் தாக்கத்தை சமாளிக்கும் அளவு எதிர்ப்பு சக்தி உள்ளதா?

இந்தியர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் என்பது சில மருத்துவ தகவல்களை வைத்து பார்க்கும்போது புலப்படுகிறது. ஆனால் அறிவியல்பூர்வமாக இது நிருபிக்கப்படவில்லை. பிசிஜி தடுப்பு மருந்தை பயன்படுத்தும் நாடுகளில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.

பொதுமக்களுக்கு என்ன அறிவுரை சொல்ல விரும்புகிறீர்கள்?

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. அதுவரை அரசாங்கமும், சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்களும் கூறியுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என தெரிவித்தார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.