உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பாடகி கனிகா கபூரை, ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே மற்றும் பாஜக எம்.பி.க்கள் சிலர் சந்தித்தனர். இந்நிலையில் பாடகி கனிகா கபூருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் வசுந்தரா ராஜேவும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது அவருக்கு கோவிட்19 ஆய்வு எடுக்கப்பட்டது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று தாக்குதல் இல்லை என தெரியவந்துள்ளது.
-
A lot of you checked up on me and I appreciate your concern. I want to thank you for your prayers & good wishes. They are what keep me going!
— Vasundhara Raje (@VasundharaBJP) March 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A lot of you checked up on me and I appreciate your concern. I want to thank you for your prayers & good wishes. They are what keep me going!
— Vasundhara Raje (@VasundharaBJP) March 21, 2020A lot of you checked up on me and I appreciate your concern. I want to thank you for your prayers & good wishes. They are what keep me going!
— Vasundhara Raje (@VasundharaBJP) March 21, 2020
எனினும் அவர் வீட்டில் தனியாக ஓய்வெடுத்துவருகிறார். இதற்கிடையில் பாஜக எம்.பி. துஷ்யந்த் சிங்குக்கும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது மகாராஷ்டிராவின் ராம்தேக்கைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. கிருபால் துமனே தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
பாடகி கனிகா தனது பயண வரலாற்றை விமான நிலைய அதிகாரிகளிடமிருந்து மறைத்து, ஸ்கிரீனிங் நடைமுறைகளை ஏமாற்றியதாக ஊடக அறிக்கைகள் குற்றம் சாட்டியுள்ளன. அவர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதியப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த இரவு விருந்திலும் கனிகா கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.