மேலாண்மை படிப்பு படித்து வரும் மாணவியான வனிஷ்காவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உத்தரப் பிரதேசம் மாநிலம் பரேலியுள்ள ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
மற்றவர்களைப் போல் தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த இவர், கரோனாவுக்கு எதிராக போராடும் சூழலில் இருந்தார். இதற்கிடையே இவரது பிறந்தநாள் குறித்து கேள்விப்பட்ட சக நோயாளிகள், சத்தமில்லாமல் மருத்துவமனை நிர்வாகத்தை அணுகி பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் நோயாளிகள், மருத்துவ பணியாளர்கள் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பாட, வனிஷ்காவின் பிறந்தநாள் கேக் வெட்டி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேசம்: கோயில் தகராறில் ஒருவர் அடித்துக் கொலை!