இந்தியாவில் கடந்த ஒரு மாத காலமாகவே, கரோனா பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. பெருந்தொற்று பரவ ஆரம்பித்த காலத்திலிருந்தே, கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் விழுக்காடு ஒன்றுக்கு கீழ் 0.99ஆக சென்றது இதுவே முதல் முறையாகும்.
கடந்த 24 மணி நேரத்தில், 63 ஆயிரத்து 509 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் மூலம் மொத்த எண்ணிக்கை 72 லட்சத்து 39 ஆயிரத்து 390ஆக உயர்ந்துள்ளது. பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 586ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை, 63 லட்சத்து 01 ஆயிரத்து 928 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனிடையே, ஊரடங்கு தளர்வின் ஒரு கட்டமாக மகாராஷ்டிரா அரசு இன்று (அக்.15) முதல் அம்மாநிலத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கை: முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்!