தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஊரடங்கு உத்தரவினால் சுங்கக் கட்டணம் செலுத்தவேண்டியதில்லை என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏப்ரல் 14ஆம் தேதி மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார். மத்திய உள்துறை அமைச்சகம் ஏப்ரல் 15ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், கரோனா ஹாட்ஸ்பாட்டுகளாக இல்லாத பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைகளை மாநில அரசுகள் தளர்த்திக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேலும், கிராமப்புறங்களில் கட்டுமானப் பணிகள் விவசாயப் பணிகள், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட சில பணிகளை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்தச் சூழ்நிலையில், இன்று முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19: தெலங்கானாவில் மே-7ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு