நாட்டில் நேற்று ஒரேநாளில் புதிதாக 3,561 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 1,233 பேரும், தமிழ்நாட்டில் 771 பேரும், டெல்லியில் 428 பேரும், குஜராத்தில் 380 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,952ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், இத்தொற்றால் நேற்று சிகிச்சை பலனின்றி 89 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 34 பேரும், குஜாராத்தில் 28 பேரும் உயிரிழந்தனர். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,783ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று 1,084 பேர் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,267ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளான மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முறையே முதல் ஐந்து இடங்களில் உள்ளன. மகாராஷ்டிராவில் 16,758 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 651 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள் | பாதிப்பு | உயிரிழப்பு | குணமடைந்தவர்கள் |
மகாராஷ்டிரா | 16,758 | 651 | 3,094 |
குஜராத் | 6,625 | 396 | 1,500 |
டெல்லி | 5,532 | 65 | 1,542 |
தமிழ்நாடு | 4,829 | 35 | 1,516 |
ராஜஸ்தான் | 3,317 | 92 | 1,596 |
இதையும் படிங்க: டெல்லியில் ஒரே நாளில் 428 பேருக்கு கரோனா பாதிப்பு