ETV Bharat / bharat

மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் 98 பேர் உயிரிழப்பு! - கரோனா பாதிப்பு இந்தியா

கரோனா வைரஸால் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 195 பேர் உயிரிழந்ததில் மேற்குவங்க மாநிலத்தில் மட்டுமே 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

COVID-19 India tracker: State-wise report
COVID-19 India tracker: State-wise report
author img

By

Published : May 5, 2020, 11:47 AM IST

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் நேற்று ஒருநாளில் 3,900 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், 195 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாட்டில் ஒரேநாளில் இத்தொற்றால் இத்தனை பேர் பாதிக்கப்பட்டதும் உயிரிழந்ததும் இதுவே முதல்முறையாகும்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,567 பேரும், தமிழ்நாட்டில் 527 பேரும், குஜராத்தில் 376 பேரும், டெல்லியில் 349 பேரும், மேற்கு வங்கத்தில் 296 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக நேற்று மேற்கு வங்கத்தில் 98 பேரும் மகாராஷ்டிராவில் 35 பேரும், குஜராத்தில் 29 பேரும் உயிரிழந்தனர்.

இதனால், நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,433ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1568ஆகவும் அதிகரித்துள்ளது. அதேசமயம் நேற்று ஒரேநாளில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 1,020 பேர் முழுமையாக குணமடைந்தனர். இதன்மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,727ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பு

தற்போது இத்தொற்றால் அதிக பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்பட்ட முதல் பத்து மாநிலங்களை குறித்தும், அதேசமயம் இத்தொற்றிலிருந்து வேகமாக மீண்டுவரும் முதல் 10 மாநிலங்கள் குறித்தும் பார்க்கலாம்.

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 10 மாநிலங்கள்:

  1. மகாராஷ்டிரா - 14,541
  2. குஜராத் - 5,804
  3. டெல்லி - 4,898
  4. தமிழ்நாடு - 3,550
  5. ராஜஸ்தான் - 3,061
  6. மத்தியப் பிரதேசம் - 2,942
  7. உத்தரப் பிரதேசம் - 2,766
  8. ஆந்திரப் பிரதேசம் - 1,650
  9. மேற்கு வங்கம் - 1,259
  10. பஞ்சாப் - 1,233

கரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த முதல் 10 மாநிலங்கள்:

  1. மகாராஷ்டிரா - 583
  2. குஜராத் - 319
  3. மத்திய பிரதேசம் - 165
  4. மேற்கு வங்கம் - 133
  5. ராஜஸ்தான் - 77
  6. டெல்லி - 64
  7. உத்தரப் பிரதேசம் - 50
  8. ஆந்திரப் பிரதேசம் - 36
  9. தமிழ்நாடு - 31
  10. தெலங்கானா - 29

கரோனா பாதிப்பிலிருந்து விரைவாக மீண்டுவரும் முதல் 10 மாநிலங்கள்

  1. மகாராஷ்டிரா - 2465
  2. டெல்லி - 1,431
  3. தமிழ்நாடு - 1,409
  4. ராஜஸ்தான் - 1,394
  5. குஜராத் - 1,195
  6. உத்தரப் பிரதேசம் - 802
  7. மத்தியப் பிரதேசம் - 798
  8. தெலங்கானா- 585
  9. ஆந்திரப் பிரதேசம் - 524
  10. கேரளா- 462

இதையும் படிங்க: குறையும் கச்சா எண்ணெய் விலை - அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.