மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி நாட்டில் நேற்று ஒரேநாளில் புதிதாக 1,718 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,050ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1074ஆகவும் அதிகரித்துள்ளது. அதேசமயம், நேற்று ஒரேநாளில் இத்தொற்றால் பாதிக்கப்பட்ட 629 பேர் குணமடைந்ததன் மூலம். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,325ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மகாராஷ்டிராவில்தான் நிலைமை படுமோசமாக உள்ளது. அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கிறது. இதுவரை 9,915 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 432 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலங்கள் வாரியாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்ப்போம்.
மாநிலங்கள் | பாதிப்புகள் | உயிரிழப்புகள் | குணமடைந்தவர்கள் |
மகாராஷ்டிரா | 9,915 | 432 | 1,593 |
குஜராத் | 4,082 | 197 | 527 |
டெல்லி | 3,439 | 56 | 1,092 |
மத்தியப் பிரதேசம் | 2,561 | 129 | 461 |
ராஜஸ்தான் | 2,438 | 51 | 768 |
தமிழ்நாடு | 2,162 | 27 | 1,210 |
உத்தரப் பிரதேசம் | 2,134 | 39 | 510 |
ஆந்திரப் பிரதேதம் | 1,332 | 31 | 287 |
தெலங்கானா | 1,012 | 26 | 367 |
மேற்கு வங்கம் | 758 | 22 | 124 |
ஜம்மு காஷ்மீர் | 581 | 8 | 192 |
கர்நாடகா | 535 | 21 | 216 |
கேரளா | 495 | 4 | 369 |
பீகார் | 392 | 2 | 65 |
பஞ்சாப் | 357 | 19 | 90 |
ஹரியானா | 310 | 3 | 209 |
ஒடிசா | 125 | 1 | 39 |
ஜார்க்கண்ட் | 107 | 3 | 19 |
சண்டிகர் | 56 | 0 | 17 |
உத்தரகாண்ட் | 55 | 0 | 36 |
இமாச்சலப் பிரதேசம் | 40 | 1 | 25 |
அசாம் | 38 | 1 | 29 |
சத்தீஸ்கர் | 38 | 0 | 34 |
அந்தமான் நிக்கோபர் தீவுகள் | 33 | 0 | 15 |
லடாக் | 22 | 0 | 16 |
மேகாலயா | 12 | 1 | 0 |
புதுச்சேரி | 8 | 0 | 3 |
கோவா | 7 | 0 | 7 |
திரிபுரா | 2 | 0 | 2 |
மணிப்பூர் | 2 | 0 | 2 |
அருணாச்சலப் பிரதேசம் | 1 | 0 | 1 |
மிசோரம் | 1 | 0 | 0 |
இதையும் படிங்க: ஊசலாடும் முதலமைச்சர் பதவி: மோடியின் உதவியை நாடும் உத்தவ் தாக்கரே!