அதன்படி, இந்த கரோனா சூழலில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு, கல்வி, உரிமைகள் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 65 சதவிகித இளைஞர்கள் கற்றல் திறன் இந்த காலகட்டத்தில் குறைந்துள்ளது.
இந்த சூழலில், பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளில் வசிக்கும் இளைஞர்களின் நிலை மிக மோசமானதாக மாறியுள்ளது. சரியான இணைய வசதி, உபகரண வசதிகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை.
இதுகுறித்து சர்வதேச உழைப்பாளர்கள் அமைப்பின் தலைமை இயக்குநர் கய் ரைடர் கூறுகையில், இந்த பெருந்தொற்று காலம் இளைஞர்களுக்கு அதிர்ச்சிகரமானதாக மாறியிருக்கிறது. அது அவர்களின் வேலை மற்றும் வேலைவாய்ப்புகளை பாதித்தோடு அல்லாமல், கல்வி மற்றும் பயிற்சியையும் பாதித்துள்ளது. இது அவர்களை மனதளவில் பலவீனமானவர்களாக மாற்றியிருக்கிறது என்றார்.
எனவே அனைத்து அரசுகளும் இது தொடர்பாக சிறந்த திட்ட நடவடிக்கைகளை வகுத்து, இளைஞர்களின் இந்த அவலநிலையை போக்க வேண்டும் என்பதே சமூக செயற்பாட்டாளர்கள் கருத்தாக இருக்கிறது.