இந்தியாவில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 50 ஆயிரத்தை தாண்டுகிறது. கரோனாவைக் கட்டுபடுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன.
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 லட்சத்து 15 ஆயிரத்து 74ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 386ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 லட்சத்து 35 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிக பட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புகள் இரண்டு லட்சத்து 96 ஆயிரத்தைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.