ETV Bharat / bharat

குடும்பத்தகராறு - காதல் ஜோடி தற்கொலை!

லக்னோ: குடும்பத் தகராறு காரணமாக காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Apr 23, 2020, 4:37 PM IST

உத்தரப்பிரதேச மாநிலத்தின் எட்டா மாவட்டம் காண்டவா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நானி (17), சோபி(16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள் இருவரும் உறவினர்கள். நானி மிர்சாப்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பும், சோபி ஒன்பதாம் வகுப்பும் படித்து வந்தனர். இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அவர்களது இருவரது குடும்பத்திலும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில், இருவரும் மனமுடைந்துள்ளனர். இந்நிலையில்,நேற்று இரவு இருவரும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். பின்னர், இன்று காலை அவ்வழியாக வந்தவர்கள், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வு செய்து, அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, தற்கொலைக்கான காரணம் குறித்து பாக்வாலா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உறவினர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:உ.பி.யில் 13 வயது சிறுமி பாலியல் வழக்கு: 6 பேர் மீது பாய்ந்த போக்சோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.