ETV Bharat / bharat

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கு - ஆவணங்களை ப.சிதம்பரத்திடம் ஒப்படைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு - கார்த்தி சிதம்பரம்

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை உள்பட அனைத்து ஆவணங்களையும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரிடம் ஒப்படைக்குமாறு சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

inx media, ED, chidambaram
chidambaram
author img

By

Published : Feb 18, 2020, 7:03 PM IST

கடந்த 2007-ம் ஆண்டு, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டிலிருந்து 305 கோடி ரூபாய் முதலீடு வருவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் வரும் அந்நிய முதலீட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அனுமதி பெறுவதற்குச் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் உதவினார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2017-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவும் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தியது. அதன்பின்னர் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரம், சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில் அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கிலும், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில், சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

அப்போது, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நேரில் ஆஜராகினர். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், குற்றப்பத்திரிகையுடன் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களை ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரிடம் ஒப்படைக்குமாறு, சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் பார்க்க: இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலுக்கு கார்த்தி சிதம்பரம் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.