மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளுக்கும், ஹரியானா சட்டப்பேரவையில் உள்ள 90 தொகுதிகளுக்கும் கடந்த 21ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் 61.13 விழுக்காடு வாக்குகளும், 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் 68 விழுக்காடு வாக்குகளும் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு இரு மாநிலங்களிலும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
மகாராஷ்டிராவில் 269 வாக்கு எண்ணும் மையங்களிலும், ஹரியானாவில் 90 வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்குகள் எண்ணப்படவுள்ளது. இதையடுத்து மகாராஷ்டிரா வாக்கு எண்ணும் மையங்களில் 25 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹரியானாவில் மூன்றடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
முதலில் தாபல் வாக்குகளும், பின்னர் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகிறது. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் என்பது போன்ற முடிவுகள் எட்டப்பட்டது. இதையடுத்து பாஜகவினர் இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க:
இருமாநில தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு உணர்த்துவது என்ன?