ETV Bharat / bharat

'கரோனா மருந்து விலை மலிவாக இருக்க வேண்டும்' - பிரதமர் மோடி - பிரதமர் மோடி

டெல்லி: கரோனாவுக்கான மருந்து விலை மலிவாகவும், அனைத்துத் தரப்பினருக்கும் சென்றடையும் விதமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
author img

By

Published : Jun 30, 2020, 5:53 PM IST

கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதற்கான மருந்தைக் கண்டுபிடிக்க முடியாமல் உலகிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் தவித்துவருகின்றனர். இந்நிலையில், கரோனாவுக்கான மருந்து விலை மலிவாகவும் அனைத்துத் தரப்பினருக்கும் சென்றடையும் விதமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கரோனாவுக்கான மருந்து குறித்த தயாரிப்புப் பணியைக் கண்காணிக்கும் விதமான உயர்மட்ட கூட்டம் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், "கரோனாவுக்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில் இந்தியா முக்கியப் பங்காற்ற வேண்டும். இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள பெரிய நாட்டில், விநியோக சங்கிலி மேலாண்மை, யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு, தனியார் துறை, சமூகம் ஆகியவற்றின் பங்களிப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இந்த முயற்சியில் நான்கு வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகின்றன. முதலில், அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, மருந்து வழங்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு முதலில் மருந்து வழங்கப்பட வேண்டும். இரண்டாவதாக, எந்தவித கட்டுப்பாடும் இன்றி, அனைவருக்கும் மருந்து வழங்கப்பட வேண்டும்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மூன்றாவதாக, விலை மலிவாகவும் அனைத்துத் தரப்பினருக்கும் சென்றடையும் விதமாக இருக்க வேண்டும். நான்காவதாக, மருந்து தயாரிக்கும் முறை தொழில்நுட்ப உதவியோடு கண்காணிக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மாதிரியான பெரிய அளவில் மருந்து விநியோகம் செய்யப்படுவதற்கான திட்டத்தை வகுக்க உயர் அலுவலர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'நமோ செயலிக்கும் தடைவிதிக்க வேண்டும்' - மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.