உலக நாடுகள் முழுவதையும் கதிகலங்க வைத்துள்ளது 'கரோனா' வைரஸ். நாளுக்கு நாள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. இந்தியாவில் கரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
மாநிலங்களுக்கிடையேயான எல்லைகளை மார்ச் 31ஆம் தேதி வரை மூட அந்தந்த மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன.
இதனிடையே, கரோனா பரவல் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு பாலியல் தொழிலில் ஈடுபட மாட்டோம் என மேற்கு வங்க மாநிலம் அலிபுர்தூர் மாவட்டத்திலுள்ள பாலியல் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த இடைப்பட்ட இரண்டு வாரங்களுக்கு பாலியல் தொழிலாளர்களின் அன்றாட செலவிற்காக உதவித்தொகை வழங்குவதாக தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏழு பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு விழிப்புணர்வுக்காக 10 இடங்களில் கை கழுவும் தொட்டி