உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பெருமளவில் அச்சுறுத்திவருகிறது. இதுவரை சுமார் நான்காயிரத்து 900 உயிர்களைப் பலிகொண்ட கொரோனா, சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளை முற்றிலும் முடக்கிப்போட்ட கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தீவிரமாகத் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. 75-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதித்துள்ள நிலையில் இது குறித்து மத்திய அரசு அனைத்து மாநில அரசுக்களுடன் தொடர்ச்சியான செயல்பாடுகளை மேற்கொண்டுவருகிறது.
இதைத் தடுக்க பல்வேறு சுகாதார ஆலோசனைகள் வழங்கப்படும் நிலையில், பத்மஸ்ரீ விருதுபெற்ற பிரபல மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் புதுமையான விதத்தில் கொரோனா விழிப்புணர்வை மேற்கொண்டுள்ளார்.
கைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கருத்தில் மணற்சிற்பம் ஒன்றை செய்துள்ளார். அதில் அச்சம் கொள்ள வேண்டாம் ஒன்றிணைந்து கொரோனாவை எதிர்கொள்ளும் பணியை மேற்கொள்வோம் என எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தீவிரம்