கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று பல்கலைக்கழகம் கோரிக்கைவிடுத்திருந்தது. இதன்மூலம் பல்கலைக்கழகத்தில் அனுமதியின்றி நுழைவோரை கண்காணிக்கவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் உதவும் எனத் தெரிவித்திருந்தது.
பல்கலைக்கழகத்தின் இந்தக் கோரிக்கைக்கு மாணவ அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். பல்கலைக்கழகம், விடுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தங்களின் தனிப்பட்ட சுதந்திரங்களைப் பாதிக்கும் என மாணாக்கர் தெரிவித்தனர்.
பல்கலைக்கழகத்தில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும் சிசிடிவி கேமராக்கள் உதவும் எனப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததது.
முன்னதாக, கடந்த ஜனவரி 5ஆம் தேதி மாணாக்கர், பேராசிரியர்கள் மீது பல்கலைக்கழக வளாகத்திலேயே தாக்குதல் நடத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: ஜே.என்.யூ. வன்முறை: 49 பேருக்கு டெல்லி காவல் துறை நோட்டீஸ்