ETV Bharat / bharat

கோவிட்-19 பெருந்தொற்று: சபரிமலைக்குள் நுழைய பக்தர்களுக்குத் தடை - பதனம்திட்டா மாவட்டம்

திருவனந்தபுரம்: கோவிட்-19 பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக சபரிமலை ஐயப்பன் திருக்கோயிலுக்கு வழிபட வரும் பக்தர்களுக்கு இடைக்காலத் தடையை திருவாங்கூர் தேவசம் வாரியம் விதித்துள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சபரிமலைக்குள் நுழைய பக்தர்களுக்கு தடை!

author img

By

Published : Mar 21, 2020, 11:59 AM IST

உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பால் இதுவரை 185 நாடுகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்து 76 ஆயிரத்து 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 ஆயிரத்து 405 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு இன்று உறுதிசெய்துள்ளது.

இந்தக் கொடிய வைரஸ் தற்போது இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. இந்த வைரஸ் பெருந்தொற்றால் 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

வைரஸ் பெருந்தொற்று தீவிரமடையும் முன் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிற மாநில அரசுகள் மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி-கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், பொழுதுப்போக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தையும் மூட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மக்கள் பொது இடங்களில் கூடவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கேரள மாநிலத்தில் வைரஸ் பெருந்தொற்று தீவிரமடைந்துவருவதால் வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்துவருகிறது. கேரளாவில் மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி-கல்லூரிகள், மக்கள் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பொழுதுப் போக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தையும் மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மக்கள் பொது இடங்களில் கூடவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வைரஸ் தொற்று மேலும் தீவிரமடையாமல் தற்காக்க சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வழிபட நுழைவதற்குத் தடைவிதிக்குமாறு பதனம்திட்டா மாவட்ட நிர்வாகத்திடமும் திருவாங்கூர் தேவசம் வாரியத்திடமும் கேரள அரசு வேண்டுகோள்விடுத்திருந்தது.

சபரிமலை அமைந்துள்ள பதனம்திட்டா மாவட்டத்தில், முதன்மை நிலையில் 235 பேரும், இரண்டாம் நிலையில் 501 பேரும் வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று ஒன்பது பேர் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மத்தியில் வைரஸ் பெருந்தொற்று பரவினால் அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று பதனம்திட்டா மாவட்ட மருத்துவ உயர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கையை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவருமான பி.பி. நூஹ், கேரள அரசின் கவனத்திற்கு கொண்டுசென்றார். இதனடிப்படையில், தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

coronavirus entry of pilgrims to sabarimala temple to be restricted
கோவிட்-19 பெருந்தொற்று: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சபரிமலைக்குள் நுழைய பக்தர்களுக்குத் தடை

பம்பை ஆற்றில் ஆண்டுதோறும் கொடியேற்றத்தோடு தொடங்கி நடைபெறும் அரரத் விழாவில் முதல்முறையாக பக்தர்களின் பங்கேற்பு இந்தாண்டு ரத்துசெய்யப்படுகிறது. மார்ச் 29ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறும் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சபரிமலை அடிவாரம், பம்பை உள்ளிட்ட இடங்களில் தெர்மல் ஸ்கிரீனிங் செய்யப்படுகிறது. கோயில் வளாகம், மலைப்பாதைகள், பேருந்து நிலையங்கள், பக்தர்கள் தங்கும் ஓய்வு இல்லங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கும் பணியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

மேலும், மல்லசேரி பிரமடோம் ஆகிய இருபகுதிகளில் கரோனா அறிகுறி கண்டறியும் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பரிசோதனையில் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்புச் சிகிச்சைக்கான தனி வார்டுகளில் அனுமதிக்கப்படுவர்.

இதையும் படிங்க : மகாராஷ்டிராவில் அனைத்து பணியிடங்களையும் 31ஆம் தேதி வரை மூட உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.