ETV Bharat / bharat

கரோனா வைரஸ்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 361 ஆக உயர்வு

பெய்ஜிங்: கரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  361ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Corona Virus
Corona Virus
author img

By

Published : Feb 3, 2020, 9:59 AM IST

Updated : Mar 17, 2020, 5:37 PM IST

சீனாவில் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் கடுமையான தாக்தத்தை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக வூஹான் நகரம், கரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. கனடா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவியுள்ளது. அதேபோல கேரளாவிலும் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதால், நாளுக்கு நாள் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் தொற்று காரணமாக 361 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.

மேலும் 56 பேருக்கு கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இதுதவிர 16 ஆயிரத்து 600 பேருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. ஒரே நாளில் இரண்டாயிரத்து 103 பேருக்கு நோய் பரவியிருப்பதாகச் சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்களில் 478 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இந்த நோயைக் கட்டுப்படுத்த சீனா அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. சீனாவின் வூஹான் மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ஒன்பதே நாள்களில் அங்கு அதிநவீன மருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆயிரம் படுக்கைகளுடன் 419 வார்டுகளுடன் கூடிய இந்த அதிநவீன மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது. 30 அவசர சிகிச்சைப் பிரிவுகளும் இங்கு உள்ளன. இன்று முதல் இந்த மருத்துவமனையில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவார்கள் என சீன அரசு அறிவித்துள்ளது. சுமார் ஏழாயிரம் தொழிலாளர்கள் இந்த மருத்துவமனையை ஒன்பது நாள்களில் கட்டிமுடித்துள்ளனர்.

இதனிடையே, அமெரிக்காவில் ஒன்பது பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கலிஃபோர்னியா மாகாணத்தில் மட்டும் நான்கு பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களுக்குள் சீனாவிற்கு சென்றிருந்த வெளிநாட்டவர் அமெரிக்காவில் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீனாவுடனான பயணிகள் ரயில் சேவையை தாங்கள் நிறுத்தியுள்ளதாக ரஷிய ரயில்வே தெரிவித்துள்ளது. முன்னதாக ஜனவரி 31ஆம் தேதியன்று, ரஷிய ரயில்வே சீனாவுடன் பயணிகள் ரயில் சேவையை தடைசெய்தது. அப்போது மாஸ்கோவிற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே மட்டும் நேரடி ரயில் சேவை செயல்பட்டது. இப்போது, ​​இந்த சேவையும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : கரோனா வைரஸ் சிகிச்சை: இரவுபகல் பாராது சேவையாற்றும் செவிலியர்!

Last Updated : Mar 17, 2020, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.