இது குறித்து அவர் கூறுகையில், “புதுச்சேரியில் நான்கு பேரும், மாகே பகுதியில் ஒருவரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் உள்ளவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது” என்றார்.
மேலும் “தமிழ்நாடு பகுதிகளான விழுப்புரம், கடலூர் ஆகிய பகுதிகளிலிருந்து புதுச்சேரிக்கு வருவோர் அதிகரித்துவருகின்றனர். அந்தப் பகுதிகளில் நோய்த்தொற்று தற்போது அதிகரித்திருப்பதால், எல்லைப் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு மக்கள் புதுச்சேரிக்கு வருவதை தடுக்கும் வகையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...ஊரடங்கால் பசியில் வாடும் நாடோடி மக்கள்!