புதுச்சேரி பாஜக மாநில செயலாளர் ஓருவருக்கு கரோனா நோய் தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் முகக்கவசம் (மாஸ்க்) தயாரிக்கும் தொழிற்கூடம் நடத்திவருகிறார்.
இவருக்கு ஏற்பட்டதை போல தொழிற்சாலையில் பணியாற்றிய ஐந்து ஊழியர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தொழிற்கூடத்தில் பணியாற்றிய 35-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். இவர் பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளதால் அங்கு யாருக்காவது தொற்று ஏற்பட்டதா எனவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதி!