இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்து 49 ஆயிரத்து 553 லிருந்து எட்டு லட்சத்து 78 ஆயிரத்து 254 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை ஐந்து லட்சத்து 53 ஆயிரத்து 471 பேர் குணமடைந்துள்ளனர். மூன்று லட்சத்து ஆயிரத்து 609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு 500 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 174 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 28 ஆயிரத்து 701 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 470 பேரும், மகாராஷ்டிராவில் இரண்டு லட்சத்து 54 ஆயிரத்து 427 பேரும், டெல்லியில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 494 பேரும் கரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானை விட ஆபத்தான நாடு சீனா - சரத் பவார்