ETV Bharat / bharat

'கரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டறிவதில் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்' - Corona Virus Latest News

கரோனா வைரசை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கு அனைத்துத் தரப்பினரின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம் என ஆராய்ச்சியாளர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

coordinated-strategy-to-accelerate-multiple-covid-19-vaccine-candidates-is-key-nih-experts-say

author img

By

Published : May 13, 2020, 12:46 PM IST

Updated : May 13, 2020, 1:51 PM IST

உலகம் முழுவதும் கரோனா வைரசால் 43 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 2 லட்சத்து 92 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கரோனா வைரசை எதிர்கொள்ளவதற்கான தடுப்பூசியோ, மருந்துகளோ ஆராய்ச்சியாளர்களால் கண்டறிய முடியவில்லை.

இந்நிலையில் தேசிய சுகாதாரத் துறை இயக்குநர் பிரான்சிஸ் எஸ். காலின்ஸ், அலர்ஜி மற்றும் தொற்றுநோய் இயக்குநர் ஆண்டனி, சியாட்டின் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் லாரன்ஸ் கோரே, தடுப்பூசி ஆராய்ச்சி மைய இயக்குநர் ஜான் ஆர். மாஸ்கோலா ஆகியோர் தடுப்பூசி கண்டறிவதற்கான வழிமுறைகள், தடுப்பூசிகளின் வளர்ச்சி விகிதம், தடுப்பூசி நிறுவனங்களின் வணிக அனுபவங்கள், அளவீடுகள் ஆகியவற்றுடன் தடுப்பூசிகள் எந்த மாதிரியான நோய் எதிர்ப்புச் சக்திகளை உருவாக்குகின்றன என்பதைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளனர்.

அதில், ''மருத்துவப் பரிசோதனை, தடுப்பூசிகளுக்கான அளவீடு மற்றும் விநியோகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புகள் மட்டுமே கரோனா வைரசை எதிர்கொள்ள உதவும். கரோனாவால் இந்த உலகம் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வரும் சூழலில், அரசு, தொழில்துறையினர், கல்வியாளர்கள் ஆகியோர் பல்வேறு தடுப்பூசிகளை அறிமுகம் செய்வார்கள். ஆனால், உலகம் முழுவதும் உள்ள மக்களைக் காக்க ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளே போதுமானது.

இதற்கு ஆராய்ச்சியில் ஏற்படும் முன்னேற்றத்தின் தகவல்களைச் சேகரித்து பல வகையான தடுப்பூசிகளைக் கண்டறிய வேண்டும். உலகளாவிய சமூகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் விதமாக மட்டுமே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இந்தக் கண்டுபிடிப்பிற்கு எவ்வித முன்மாதிரிகளும் இல்லாமல் செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அதேபோல் கரோனா வைரசிற்கு எதிராக கண்டறியப்படும் மருந்துகள், நீண்ட நாள்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை மக்களுக்கு உருவாக்க வேண்டும் என்பதில் ஆராய்ச்சியாளர்கள் கவனமாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. தடுப்பூசிகள் ஆராய்ச்சி பரிசோதனைகளை மதிப்பாய்வு செய்தபோது, தடுப்பூசிகள் எவ்வாறு பரிசோதிக்கப்பட வேண்டும் என்பதோடு அதனின் பாதுகாப்பும், செயல்திறனும், எவ்வாறு இருக்க வேண்டும் என்பன குறித்து ஆலோசிக்கப்பட வேண்டும்.

அதேபோல் பல தடுப்பூசி ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளை ஆராய்வதற்காக கண்காணிப்பு வாரியத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்தத் தடுப்பூசியைக் கண்டுபிடிக்க கல்வியாளர்கள், அரசுகள், தொழில் நிறுவனங்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு அவசியமாகும்.

உலகம் முழுவதும் உள்ள மக்களைப் பாதுகாக்க அதிகப்படியான தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. அதேபோல் தடுப்பூசிகள் கண்டறியப்படுவதற்கான செலவினங்கள், அதன்பின் செய்யப்பட வேண்டிய விநியோகச் செலவுகள் ஆகியவற்றை அரசு ஏற்க வேண்டும். இந்தத் தடுப்பூசிகள் ஆராய்ச்சிகளில், பொது நிறுவனங்களோடு தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது'' எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கோவிட்-19 மருந்து: மரபணு ஆராய்ச்சியில் முதல் வெற்றி...!

Last Updated : May 13, 2020, 1:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.