ETV Bharat / bharat

'ஷ்ராமிக் ரயில்களை இயக்க மகாராஷ்டிரா அரசு ஒத்துழைக்க வேண்டும்' - பியூஷ் கோயல்

author img

By

Published : May 27, 2020, 2:23 AM IST

டெல்லி: ஷ்ராமிக் ரயில்களை இயக்குவதற்கு ஒத்துழைக்குமாறு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், மகாராஷ்டிரா அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஷ்ராமிக் ரயில்களை இயக்க மகாராஷ்டிா அரசு   ஒத்துழைப்பு தேவை' - பியூஷ் கோயல்

இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டரில், "மகராஷ்டிராவில் இன்று 145 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நண்பகல் 3 மணியளவில், 50 ரயில்கள் புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால், குறைந்த பயணிகள் காரணமாக 13 ரயில்கள் மட்டுமே புறப்பட்டுச் சென்றுள்ளது. தயவுகூர்ந்து மகாராஷ்டிரா அரசு இதற்கு ஒத்துழைப்புத்தர வேண்டும். இல்லையேல் இந்த மொத்த திட்டமும் பாதிக்கப்படும்" எனத் தெரிவித்திருந்தார்.

  • On request of Maharashtra Govt, we arranged 145 Shramik Special Trains today. These trains are ready since morning. 50 trains were to leave till 3 pm but only 13 trains have due to lack of passengers.

    — Piyush Goyal (@PiyushGoyal) May 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக மகாராஷ்டிரா அரசு புலம்பெயர் தொழிலாளர்களை, அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்ப, நாள் ஒன்றுக்கு 80 சிறப்பு ரயில்களை கேட்டிருந்தது. ஆனால், மத்திய அரசு 30-40 ரயில்களை அனுப்புவதாக அம்மாநில அரசுக்குத் தெரிவித்திருந்தது.

மறுபுறம் நேற்று முன் தினம் (25/5/20) மொத்தமாக 125 ரயில்களை மத்திய அரசு ஏற்பாடு செய்தது. ஆனால், அம்மாநில அரசால் 41 ரயில்களில் பயணம் செய்யும் அளவிற்குத்தான் தொழிலாளர்களின் விவரங்களை அளிக்கமுடிந்தது. அதில் அதிகப்பட்சமாக 39 ரயில்களில்தான் தொழிலாளர்கள் பயணித்திருக்கின்றனர்.

மகாராஷ்டிராவிலிருந்து ஷ்ராமிக் ரயில்கள் 68 உத்தரப் பிரதேசத்துக்கம் 27 பிகாருக்கும் 41 மேற்கு வங்கத்திற்கும் ஒடிசாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் தலா இரண்டு ரயில்களும் அத்துடன் சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், உத்தரகாண்டிற்கு தலா ஒரு ரயிலும் சென்று இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ரயில்வே உயர் அலுவலருக்கு கரோனா: மூடப்பட்ட தலைமையகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.