புதுச்சேரி தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் புதுச்சேரி பிஎஸ்என்எல் அலுவலகத்தினுள் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். போராட்டத்தில் பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு ஆகிய செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய டெண்டர் முறையான அவுட்சோர்சிங் முறையை அமல்படுத்தக் கூடாது எனவும் கோஷங்கள் ஏழுப்பினர்.
அதுமட்டுமின்றி 10 மாதங்களாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்காத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தனர்.
போராட்டத்தில் கலந்த கொண்டவர்கள் மாஸ்க் அணிந்தும், தகுந்த இடைவெளியை பின்பற்றியும் அமர்ந்திருந்தனர். நிரந்தர ஊழியருக்கு வழங்கும் ஊதியத்தில் ஐந்தில் ஒரு பங்கு குறைவாக ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளமாக தரப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 10 நாள்களில் கரோனாவை குறைப்பதே இலக்கு! - சென்னை மாநகராட்சி ஆணையர்