ETV Bharat / bharat

பெண்கள், குழந்தைகளுக்கான அரசியல் சாசன உரிமைகள் - சிறப்புக் கட்டுரை - Constitutional rights of women and children

பெண்கள், குழந்தைகளுக்கான அரசியல் சாசன உரிமைகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி மதன் பி. லோகுரின் சிறப்புக் கட்டுரை.

Constitutional rights of women and children

author img

By

Published : Jan 27, 2020, 1:38 PM IST

70 ஆண்டுகாலமாக குடியரசைக் கொண்டுள்ள நமது நாட்டில், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நமது அரசியலமைப்பு வழங்கியுள்ள ஆக்கப்பூர்வமான ஆதரவை நாம் எந்த அளவிற்கு முன்னெடுத்துச் சென்றுள்ளோம் என்பது குறித்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் குறித்து விளக்கும் அத்தியாயமானது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் சட்டம் அனைவருக்கும் சமமான பாதுகாப்பை அளிக்கக்கூடியது என்றும் கூறுகிறது.

சாதி, மதம், இனம், பாலினம், பிறந்த இடம் போன்ற எந்த ஒன்றின் அடிப்படையிலும் பாகுபாடு காட்டப்படுவதை நமது அரசியல் சாசனம் தடை செய்கிறது. அதேபோல், “பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்கள் மற்றும் முன்னேற்றத்திற்கான எந்தவொரு சிறப்பு ஏற்பாடு, அதாவது சிறப்பு அதிகாரம் வழங்கப்படுவதையும் தடுக்காது” என்கிறது பிரிவு 15 (3).

நமது அரசியலமைப்பை வடித்தவர்கள், ஆட்சியமைப்பில் பெண்களின் பங்களிப்பை அங்கீகரித்ததோடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பதை இவை தெளிவுபடுத்துகின்றன. அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நாம் முன்னெடுத்துச் செல்கிறோமா?

நாடு குடியரசான தொடக்கத்தில் பெண்கள் சமத்துவத்துடன் நடத்தப்படுவதற்கும் அவர்களின் உரிமைகளுக்கும் உத்வேகம் அளிக்கப்பட்டது. 1950களின் மத்தியில் நிறைவேற்றப்பட்ட இந்து சட்டம் ஒரு ஜன்னலை திறந்தது. முன்னேற்றம் மெதுவாக இருந்தபோதிலும் அது நிலையானதாக இருந்தது. மகப்பேறு சலுகைச் சட்டம், வரதட்சணை தடைச் சட்டம் ஆகியவை 1961இல் இயற்றப்பட்டன.

ஆனால், சட்டங்களால் மட்டுமே சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியாது.
உதாரணத்திற்கு, வரதட்சணைக் கொடுமையால் ஒரு பெண் உயிரிழப்பது கொடூரமான குற்றம் என்கிறது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 B. எனினும், வரதட்சணை மரணங்களை இது நிறுத்திவிட்டதா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனென்றால், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு வரதட்சணை மரணம் நிகழ்வதாகக் கூறுகிறது தேசிய குற்றப் பதிவு ஆணையம் (NCRB).

இதேபோல், வீடுகளில் நடக்கும் வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கும் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் அளிக்கப்படுவதைத் தடுப்பதற்கும் சமீபத்தில் சட்டங்கள் இயற்றப்பட்டன. உண்மையில் அந்தச் சட்டங்கள் அதன் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டனவா?. அந்தச் சட்டங்கள் அவசியமானவைதான். அதில், நல்ல செய்தி என்னவென்றால், இத்தகைய சட்டங்களால்தான், அரசியலமைப்பு வழங்கியுள்ள சில உரிமைகளை பெண்கள் பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

அரசின் கொள்கைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் கோட்பாடுகள் (DPSP), ஆண்களும் பெண்களும் தங்களுக்கான வாழ்வாதாரங்களைப் போதுமான அளவிற்குப் பெறுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இரு பாலருக்கும் சமமான வேலைக்கு சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளில் பெண்களுக்கு நமது அரசியலமைப்பு இட ஒதுக்கீடு வழங்குகிறது. இருந்தபோதிலும், பெண்கள் இருக்க வேண்டிய இடம் வீடுதான் என உயர் பதவிகளில் இருப்பவர்கள் உள்பட பலரும் கூறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டின் மூலம் பெண்களில் சிலருக்கு வாய்ப்புகளை கொடுத்தாலே போதுமானது என்ற பொதுபுத்தி நம் சமூகத்தில் நிலவுகிறது. எனவே, அதனை மாற்ற சட்டம் மட்டும் போதாது; பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் நமது அரசியல் சாசனத்தை வடித்தவர்களுக்கு இருந்த அதே தொலைநோக்குப் பார்வை நமக்கு ஏற்பட மன மாற்றம் மிகவும் அவசியம்.

மனித உரிமைகளுக்கான சர்வதேச பிரகடனத்தின் 25ஆவது பிரிவு, குழந்தைகளுக்கு சிறப்புக் கவனிப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் அது அவர்களுக்கான உரிமை என்றும் வலியுறுத்துகிறது. இதைக் கருத்தில்கொண்டே, 14 வயதிற்குட்பட்ட எந்தவொரு குழந்தையும் தொழிற்சாலைகளிலோ, சுரங்கங்களிலோ, வேறு எந்த அபாயகரமான இடங்களிலோ பணி அமர்த்தப்படக் கூடாது என்கிறது நமது அரசியலமைப்பு. குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் அவர்கள் ஆரோக்கியமான முறையில் வளர்வதையும் உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை என்கிறது DPSP.

மேலும் சுதந்திரமாகவும், கெளரவமாகவும் குழந்தைகள் நடத்தப்பட வேண்டியதையும் இளைஞர்கள் சுரண்டப்படாமல் இருப்பதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்கிறது அது. இவை எல்லாம் உயர்ந்த லட்சியங்கள். ஆனால், குழந்தைகள் தங்களுக்கான உரிமைகளைப் பெற போதுமான நடவடிக்கைகளை நாம் எடுத்திருக்கிறோமா? உரிமைக் குரல் எழுப்பத் தெரியாத குழந்தைகளின் நலன்களுக்காக, குறிப்பாக பெண் குழந்தைகளின் நலன்களுக்காக தேசிய கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் கவனித்துக் கொள்ளப்படவும் பாதுகாக்கப்படவும் சிறார் நீதிச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதேபோல், பதினான்கு வயது வரை அவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதும் சட்டமாக்கப்பட்டுள்ளது. என்றபோதிலும், கள நிலவரம் ஏமாற்றமளிப்பதாகவே இருக்கிறது. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பிற்காக கைலாஷ் சத்தியார்த்தி அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார். இருந்தபோதும், குழந்தைத் தொழிலாளர்கள் முறை இன்னும் பெரிய அளவில் நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது.

மருத்துவத் துறையின் மோசமான செயல்பாடு காரணமாக கடந்த சில மாதங்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்திருப்பது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் 250க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போவதாகக் கூறுகிறது தேசிய குற்றப் பதிவு ஆணையம் (NCRB). பெண் குழந்தைகளுக்கான இல்லம் ஒன்றில், 30க்கும் மேற்பட்ட இளம் சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பலருக்கு அண்மையில் தண்டனை வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு நமது அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகள் இன்னும் அவர்களை சென்றுசேரவில்லை என்பதையே இது தெளிவுபடுத்துகிறது.

2016 – 2018 காலகட்டத்தில், சிறார்களால் செய்யப்படும் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் ​​குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகவும் கூறுகிறது NCRB. கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டு கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இது பல நன்மைகளை வழங்கியுள்ளது, ஆனால் எந்த அளவிற்கு?. போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் பற்றாக்குறையாலும் பல குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. இவற்றைப் பெறுவதற்கான உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டுவருகிறது.

துடிப்பான ஜனநாயக குடியரசைக் கொண்ட ஒரு முற்போக்கான சமூகத்தின் முன் பதில் காண வேண்டிய பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. உண்மையில் நாம் எதை சாதித்துள்ளோம்? வெளிப்படையாகத் தெரியும் பல்வேறு தோல்விகளுக்கு என்ன காரணம்? நம்மிடம் இதற்கு எத்தகைய தீர்வுகள் இருக்கின்றன?. முதலில், காலம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். தங்களுக்கு உரிமைகள் இருப்பதைப் பெண்கள் நீண்ட காலத்திற்கு முன்பே உணர்ந்திருந்தனர். ஆனால் அந்த உரிமைகள் தற்போது வலியுறுத்தப்பட்டுவருகின்றன.

சமத்துவத்துடனும் கண்ணியத்துடனும் தாங்கள் நடத்தப்படுவதை உறுதிசெய்துகொள்ள பெண்களை அரசியலமைப்பு ஊக்குவிக்கிறது. இந்த உரிமைகளை மறுக்கவோ, பெண்களை அடக்கிவைக்கவோ தலைவர்கள் உட்பட யாராலும் முடியாது என்பது ஒரு அடிப்படை உண்மை. நமது மக்கள்தொகையில் சுமார் 37 சதவீதம் இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் நமது நாட்டின் எதிர்காலம். ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் அவர்களின் உரிமைகள் கவனிக்கப்படவில்லை அல்லது அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றே கூற வேண்டும்.

அவர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரியவற்றை அவர்களுக்கு அளிக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்களும் அவர்களுக்கான நலத்திட்டங்களும் எவ்வாறு அமல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து தணிக்கை செய்ய வேண்டியது அவசியம்.
நேர்மையான விசாரணை காரணமாகவே, பெண் குழந்தைகளுக்கான இல்லத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

அதுபோன்ற, நடுநிலையான பகுப்பாய்வுகளின் மூலமே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உரிமைகள் எவ்வாறு கிடைக்கின்றன என்ற கள நிலவரத்தை அறியச் செய்ய முடியும். 70 ஆண்டுகால குடியரசைக் கொண்டுள்ள நம் முன், நமது எதிர்காலத்திற்கான திட்ட வரைபடம் என்ன?. இந்தியா உள்பட 193 நாடுகளின் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளே இதற்கு விடை.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை உள்ளடக்கிய இந்த இலக்குகளை அடைய நாம் ஜனநாயக முறையில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதன்மூலம்தான் செழிப்பான எதிர்காலத்தை நம்மால் பெற முடியும். தூங்குவதற்கு முன்பாக, நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம் என்பதை நாம் உணர வேண்டும்.

இதையும் படிங்க: அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் - மம்தா ட்வீட்

Intro:Body:

Constitutional rights of women and children 

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.